இன்று, அதீத மதப்பற்றானது மக்களைப் பிரித்துக் கொண்டும் மற்ற மதத்தினரை தாழ்த்தி தம்மை உயர்த்திப் பார்க்கிற ஒருவகை மன நிலையினையுமே ஏற்படுத்தி இருக்கிறது. இப்படியான நிலையில் ஒரு உருப்படியான சமூகத்தினை இனி எதிர்பார்க்க முடியாது. ஒரு மதத்தினைப் பின்பற்றுகிறவன் எப்போதும் பகுத்தறிவாளனாக இருக்க இயலாது. மதத்தில் பகுத்து அறிதலுக்கு 100 வீத இடமில்லை. வேறு மாதிரியாகச் சொன்னால் மதத்தில் சொல்லப்பட்ட ஒன்றை பின்பற்றுகிறவர்கள் ஏற்றுத்தான் ஆகவேண்டும், மறுக்க முடியாது. இதில் வேடிக்கை என்னவெனில் உலகிலிருக்கிற எந்தவொரு மதத்திற்கும் 100 வீத வரலாற்று உண்மை கிடையாது. வெறும் நம்பிக்கைதான் (இறைவன் வந்தார், பேசினார், போனார்). நான் எனக்குப்பிடித்த ஒன்றைப் பின்பற்றுகிறேன் என்பதற்கு வேண்டுமென்றால் நம்பிக்கை போதுமானதாக இருக்கலாம் அது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அடுத்தவருக்கு அதை உண்மை, அதுவே சரி என்று சொல்லுவதற்கு அந்த நம்பிக்கை ஒருபோதும் உதவாது. 100 வீத வரலாற்றுண்மை இல்லாதமையால் மதம், நம்பிக்கைக்கு பொிய முக்கியத்துவம் கொடுக்கிறது. “நம்பிக்கை” என்பது மட்டும் உடைபட்டால் உலகிலுள்ள மற்ற நீதி புத்தகங்கள், புராண புத்தகங்கள், கதை புத்தகங்கள் போலவே மதப்புத்தங்களும் ஆகிவிடும்.
உலகம் இன்று எத்தனையோ கற்பிதங்களோடே சுற்றிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்குள்ளும் சிக்கி சின்னா பின்னமாகாமல் பகுத்து அறிந்து தப்பிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அவ்வளவுதான்! மற்றப்படி மனிதர்களுக்கு விடை தொியா கேள்விகள் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும் அதற்கு விஞ்ஞானம் பதில் கண்டுபிடிக்குமளவும் அனேகமாய் அவை கடவுளுடன் தொடர்பு படுத்தப்பட்டே இருக்கும் !
அண்மையில் ஒரு மதத்தலைவரிடம் பேசவேண்டி வந்ததினால்.. – 23 January 2015
எப்போதும் ஒன்றை உருவாக்குகிறபோது அதற்காக உழைக்கவேண்டி இருக்கும். அந்த உழைப்பிற்காக மாத்திரம் அதை ஆதரிக்கவேண்டும் என்பது “நாங்கள் எவ்வளவு செலவு செய்து கடினப்பட்டு சமைத்திருக்கிறோம் தொியுமா? ருசியோ, நஞ்சோ அதைப்பற்றியெல்லாம் அக்கறைப்படாமல் தயவுசெய்து சாப்பிடுங்கள் ” என்பதாய்த்தான் முடிகிறது. –  7 December 2014
கடந்த சில வருடங்களுக்குள் புலம்பெயர் தேசத்தில் தயாரிக்கப்பட்ட ஓரிரு முழு நீளத்திரைப்படங்கள் இந்தியத் தமிழில் Dubbing செய்யப்பட்டு இந்தியாவிலேயே Satellite Rights க்கு விற்கப்பட்டு இருக்கின்றன. 3 மணி நேரத்தினை கடத்துவதற்காக இவற்றை அவர்கள் சாதாரணமாக 25 லட்சத்திற்கு வாங்குகிறார்கள். இருக்கிற தொடர்புகளை வைத்து அதிக தொகைக்கும் அவற்றை விற்கலாம். திரைப்படத்திற்காகச் செலவழித்த பணத்தினை மீளப் பெற தயாரித்தவர்களுக்கு இது ஒரு நல்ல வழி! இதில் தவறில்லை! ஆயினும் அவைகளை இங்கே புலம்பெயர் தேசத்திங்களில் திரையிடுவதற்கு முனைகிறபோது அவர்கள் எடுக்கிற ஆயுதம் “ஈழத்தமிழ் சினிமா”. எம் அடையாளத்தையும் தனித்தன்மையினையும் பேணிக்கொள்பவை மட்டுமே “ஈழத்தமிழ் சினிமா” என்ற அடைக்குள் வரும். அதற்கு அண்மைய உதாரணம் Lenin M. Sivam அவர்களின் A Gun A Ring. இந்தியப்பாணியில் வருபவை அதற்குள் எப்படி வரும்!?! ஈழத்தமிழன் எல்லாப் பக்கமும் ஏமாற்றப்படுகிறான்!  –  17 March 2014
ஈழத்தமிழ் உச்சரிப்பினை எங்கள் படைப்புக்களில் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுவதற்கான முக்கிய காரணம், நாம் எம் தனித்தன்மையினைத் தொடர்ந்து பேணிக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே, அதுவே எம் வாழ்க்கைச்சூழலோடு எம்மை மெய்யாய்த் தொடர்புபடுத்தி நிற்கும். ”பொள்ளாச்சி சந்தையில பொடலங்கா வித்த புள்ள” என்பது எமக்கு என்றும் அன்னியமே! தமிழ் நாட்டவர் மேலோ அல்லது தென்னிந்திய தமிழ்ச்சினிமா மேலோ எந்தக் காழ்ப்புணர்வும் எமக்குக் கிடையாது! இங்கிலாந்துப் படங்களுக்கும் அமெரிக்கப் படங்களுக்குமான ஆங்கில உச்சரிப்பு வேறுபட்டே இருக்கின்றன. –  வியாபார நோக்கத்திற்காக என்று சொல்பவர்கள் குறித்தோ அல்லது தென்னிந்திய சினிமாத் தமிழ்ப்பேச்சினை அங்கீகாரமென நினைக்கும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் குறித்தோ நாம் இங்கு அக்கறை கொள்ளவில்லை. நாம் எம் தனித்தன்மை குறித்தே இங்கு அக்கறைகொள்கிறோம்!, அது குறித்து இளையவர்களுக்கும் தெரியப்படுத்த நினைக்கிறோம். அவ்வளவுதான்! அதில் தவறிருப்பதாய் எனக்குத்தெரியவில்லை!! – 26 January 2014
இன்று ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தேன். தற்செயலாக தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. பொங்கல் வெளியிடு பற்றிய கூச்சல்! நடிகரின் படத்தை நோக்கி பால் பொதிகளை பிதுக்கினார்கள். மேலே ஏறி பியர் ஊற்றினார்கள்! பூசனிக்காயில் கற்பூரம் வைத்துத் தீபம் காட்டினார்கள். தேங்காய் உடைத்தார்கள்! சிலருக்கு அங்கேயே பொன்னாடை போர்க்கப்பட்டது! இவ்வளவு கேவலத்தையும் தொலைக்காட்சியில் ஏதோ பெருமை போல ஒளிபரப்புகிறார்கள்! இவ்வளவிற்கும் நாங்கள் யார்? கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே.. – 14 January 2014
ஒருவர் படித்த இரு பாடல்களைக் கேட்டேன். ஒன்று பெண்ணடிமை (சேலையைக் கட்டடி பொம்பிளை) மற்றயது தமிழீழம் (Respect to தலைவர்! தமிழீழம் மலரும்) சம காலத்தில் கொடி, தலைவர், தமிழீழம், தமிழ்… இப்பிடி உணர்வு ரீதியான விடயங்களை தங்கள் படைப்புக்களில் அள்ளித் தெளிக்கிற இளவட்டங்களுக்கு, சமூகம் பற்றிய பார்வையோ அக்கறையோ இருக்கிறதா என்றால், 99 வீதத்தினருக்கு இல்லை! அதுபற்றியும் தெரியாது. வெறும் உணர்ச்சி மேலீட்டிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது இவர்கள் உலகம்!  – 24 November 2013
புதுசா வாகனம் வாங்கினால் மத குருவிடம் கொண்டு போய் பிராத்தனை செய்கிறார்கள்! கேட்டால் கடவுள் பக்தியாம்!
அப்பக் கோவணம் வாங்கினாலும் கொண்டு போகோணுமே? பயத்தில செய்யிற வேலைக்கெல்லாம் பக்தியெண்டு பேர்!!!
போங்க போங்க, போய் வேலையப்பாருங்க… – 8 October 2013
இங்கே சாதியிலே வர்க்கத்திலே கல்வியறிவிலே தம்மை உயர்ந்தவர்களேன நினைக்கிறவர்கள் மற்றவர்களை விலத்தியும் தாழ்தியுமே பார்க்க ஆசைப்படுகிறார்கள். மாறாக அவர்களே இவை ஒன்றிலோ அல்லது இரண்டிலோ ”நீங்கள் கீழே” என சமூகத்தினால் விலத்தப்படுகிறபோது சமநிலை பற்றி பேசுகிறார்கள். – 23 August 2013
Please don’t request or expect me to do a cover, remix or remake to existing popular songs, as I will do it only for my own songs.
I may be popular for my music but will never make music to become popular! – 13 February 2013
ஒரு கைத்தொலைபேசி வாங்குவதற்கே ஆயிரம் தேடல்கள் செய்கிறவர்கள், மற்ற மதங்கள் குறித்த முழு அறிவுவோ அல்லது ஒரு தேர்வோ இன்றிப் பின்பற்றும், ”தம்முடைய மதமே” சரியானது, உண்மையானது என்று எப்படிக் கூறுகிறார்கள் எப்படி அதற்காக வாக்குவாதங்கள் எல்லாம் செய்கிறார்கள்?  [ஒரு கைத்தொலைபேசி வாங்குவதற்கே ஆயிரம் தேடல்கள்…] – 22 January 2013
ஒரு இனம் தனித்து நிற்கவேண்டுமாயின் அதற்கான கலை, பண்பாடு அவசியம். அவ்வகையில் எம் சமூகத்திற்கான ஒரு பரந்த கலைவெளி உருவாக்கப்படவேண்டும்! அவ் ஈழக்கலைவெளி என்பது நம் சமூகத்திற்கு ஆரோக்கியமானதாய் இருக்கவேண்டும். ஒரு உதாரணத்திற்கு, போராட்டத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், மரியாதை எங்கள் படைப்புக்களில் வழங்கப்படுகிறதா அல்லது பெரும்பான்மைச் தமிழ் சினிமா போல அவர்களைப் போதைப் பொருளாக்கியுள்ளோமா என்று பார்ப்போம்? அதை விடுத்து கோடம்பாக்கத்தினை விரட்டிவிட்டு நாங்கள் அந்த இடத்தில் குப்பைகளைக் கொட்டப்போகிறோம் என்றால் அதற்கு அவர்களே கொட்டலாம்! – 3 January 2013
சேகுவாரா, பொப்மாலி போன்றவர்களை தங்கள் ஆடை ஆபரணங்களில் தாங்கிக் கொண்டு திரியும் கலைஞர்கள் பலருக்கு, அவர்கள் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றிய அறிவோ அக்கறையோ கிடையாது. ஆகையால் இவர்களும் சமூகம் பற்றி அக்கறைப்படுவதில்லை. இதற்கெல்லாம் மேலாக ஒரு கலைஞனால் ஏற்படுத்தக்கூடிய சமூக மாற்றங்கள் பற்றிய விளக்கமெல்லாம் அவர்களிடம் இல்லையென்பது கவலைக்குரிய விடயம் – 28 December 2012
அனேகமான ஈழத்தமிழ் பாடகர்கள் தென்னிந்தியத் தமிழ் சினிமா வாய்ப்பினையே தமது இறுதி இலக்காக எண்ணியிருப்பதால், (சுதந்திரமாக இயங்கக்கூடிய) புலம்பெயர் ஈழத்தமிழ் இசையமைப்பாளர்கள் முயன்றால் மாத்திரமே ஈழத்தமிழ் (இசை) கலைஞர்களுக்கான ஒரு வெளியினை (Space) உருவாக்க முடியும். (இதற்காக, சினிமாவில் பாடுவதையும் பாடுவோரையும் தவறென்று சொல்லவில்லை) – 21 December 2012
சரியோ பிழையோ, அமைப்புக்களுக்கு இடையே ஆயிரம் அரசியல் இருந்திட்டுப் போகுது.
அதுக்காக பெரியார் சமூகத்துக்கு என்ன செய்தார் என்றெல்லாம் கேட்பார்களா? யப்பா! – 6 December 2012
நீ தொடர்ந்து ரசித்து வரவேற்கிற படைப்புக்களை வைத்தே,
நீ யாரென்று இலகுவில் அடையாளம் கண்டுகொள்ளப்படுவாய்
குப்பையினை அறைக்குள் மாத்திரமல்ல
தலைக்குள்ளும் கொட்டாதே – 25 November 2012
எந்த வியாபாரியும் தன் வாடிக்கையாளனை விமர்சிக்க மாட்டான். அது போலவே இவர்கள் தொழில் அது. இவர்கள் வருமானம் உங்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு ரசிகனும் இவர்களுக்கு ஒவ்வொரு 100 ரூபாய்த்தாள். அதற்காக வேண்டியே திரைக்கு வெளியிலும் இவர்கள் தொடர்ந்து நடிக்க வேண்டியிருக்கிறது. ரசிகர்கள் திரைக்குள்ளும் வெளியிலும் ஏமாறுகிறார்கள் அதனால்தான் தலை, தளபதி, சீயான் போன்ற சண்டைகள் நடக்கின்றன! – 19 October 2012
சாதியென்றும் கல்வி அறிவென்றும்
பிரதேசவாதமென்றும்
வர்க்கங்களென்றும்
தனக்குள்ளேயே ஒடுக்கும்
தன்னிலை உணராச் சமூகமொன்று
தன் மேலான ஒடுக்குமுறைக்கெதிராய்
விடுதலை நோக்கிப் போராடுகிறது – 14 October 2012
வெள்ளைக்காரனுக்கு வேலை செய்யப்போனவர்கள் என்று சொல்லப்படும் பொதுவான கருத்து இன்று பொருந்தாத விடயமாகப்படுகிறது எனக்கு.
காரணம், வேட்டியைத் தொலைத்து வெள்ளைக்கார நீளக்காற் சட்டை நாகரீகத்திற்கு பிறந்த நாட்டிலேயே மாறிவிட்டோம், சொந்த நாட்டில் இருந்தபடியே (அனேகமானோர்) இப்போ வெள்ளைக்காரனுக்குத்தான் வேலைசெய்கிறோம். அதைவிட மேற்குலக நாடுகள் தங்கள் கதவுகளை இலவசமாகத் திறந்து விட்டால் வெகு சிலரே சொந்த நாட்டில் தொடர்ந்திருப்போம். நிலமை இப்படியிருக்க, பின்னர் எப்படி வெளிநாட்டு மோகம் என்று போனவர்களைத் தூற்றமுடியும். நான் சொல்ல வந்தது, வாழும் பிரதேசத்தினாலும் வாழும் (பொருளாதார) முறையினாலும் ஒருவர் உயர்ந்து விடப்போவதில்லை என்பதையே! – 13 October 2012
புலம்பெயர் தேசங்களில் இருக்கும் பலர் தாங்கள் இப்போ வெளிநாட்டில் இருப்பதால்
ஊரில் உள்ளோரை விட உயர்ந்தவர்கள் எனக் கருதுகிறார்களாம்
நாசமாப்போச்சு!
நாய்க்கு நாப்பது பவுணில
நகை போட்டாலும்
நாயைக் கொண்டுபோய்
நடுக்கடலில விட்டாலும்
நாய் நாய் தானேடா.
நாதாரி! – 12 October 2012
மண் விடுதலை என்பது வெறுமனே ஆக்கிரமிப்பாளர்களை அடித்துவிரட்டுவது கிடையாது. அது மனம் சார்ந்ததாகவும் இருக்கிறது. மூடநம்பிக்கைகளும் சாதி வேறுபாடுகளும் மலிந்த சிந்தனைகளும் கொண்ட ஒரு சமுதாயம் ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியப்பதால் மட்டும் விடுதலையடைந்துவிடப் போவதில்லை. – 26 July 2012
தான் ஊதிப்பெருக்கவேண்டும் என நினைக்கும் எந்தத் தனிமனிதனும் ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப மாட்டான் என்பதற்கப்பால் அதைக் கட்டியெழுப்பவிடவும் மாட்டான். தீராப்புற்றுநோய் பிடித்த தேசங்களாய் இன்று உலகில்… – 26 July 2012
லண்டன் பல பண்பாடுகளைக்கொண்ட மக்கள் வசிக்கும் நகரம்! அதனாலேயே இங்கே அவர்கள் உலகத்தினரை ”ஒலிம்பிக் 2012 லண்டனுக்கு” அழைப்பதாக ஒரு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்துக்கொண்டு ‘தமிழுக்கு கெளரவம்” என்று தூக்கிப்பிடிப்பது அறியாமை. உலக அழகிப்போட்டி முதல் சினிமா வரை இன்று தெற்காசியாவிற்குள் மேற்கின் ஆர்வம் சென்றதிற்கான காரணம் வியாபார நோக்கமே (சந்தைப்படுத்தலே) அன்றி வேறில்லை! – 23 July 2012
ஒருவர்: இதென்ன? நான்: “சு” (என்ற எழுத்து)
ஒருவர்: அட..! தமிழிலயா கையெழுத்து வைக்கிறீர்?
நாலுபேருக்கு விளங்க வேண்டி நாலு மொழியில எழுதிறம்.
கையெழுத்தை  என்ர மொழியில வைக்கக்கூடாதா.
அதற்கென்ன ஒரு “அட..!” – 17 July 2012
சொல்லியழச் சொந்த நாட்டில் ஆயிரம் அவலங்களும் புலத்தைப் பெயர்ந்ததால் எத்தனையோ சமூகச் சிக்கல்களுமிருக்க எது பற்றியும் அக்கறையின்றி பத்திற்கொன்பது காதல்ப் படைப்புக்களை வெளியிட்டுப் பெருமை கொள்கிறது என் ஈழத்தமிழினம் – 26 June 2012
பிரபலங்களுடன் புகைப்படமெடுப்பது மகிழ்வான விடயம்தான் ஆனால் அதை ஒரு பெரிய சாதனையாக எண்ணாதீர்கள். உங்களுக்கு அவர் லட்சத்தில் ஒருத்தர் அதனால் அவரை ஒரு நாளும் மறக்கமாட்டீர்கள் அவருக்கும் அப்படித்தான் அதனாலேயே அவர் உங்களை ஒரு நாளிலேயே மறந்து விடுவார். – 21 June 2012
அறுபது பாடல்களுக்கு மேல் வெளியிட்டு அதிலும் கடைசியாய் இராவண்ணனை வெளியிட்ட என்னை
இன்னும் புரிந்து கொள்ளாமல் கழுத்தில் பெரிய சங்கிலி மாட்டு பெரிய ரீசேட்டுக்கள் போடு என்கிறார்கள்.
நான் என்பவன் நான் தான், என்னைப் பார்க்கிறவன், எங்களைப் பார்க்கட்டும் – 15 June 2012
வரலாற்றில் இடம் பிடிக்கவென ஒன்றையும் செய்யாதே
ஒழுங்கானதை செய் வரலாறு தானாய் இடம்கொடுக்கும்.
நீயே மண்ணாய்ப் போனபின் வரலாறு என்ன மண்ணுக்கு?
நல்லதைச் செய்! செத்துப்போ! – 14 June 2012
நீ தொடர்ந்து ரசித்து வரவேற்கிற படைப்புக்களை வைத்தே, நீ யாரென்று இலகுவில் அடையாளம் கண்டுகொள்ளப்படுவாய் குப்பையினை அறைக்குள் மாத்திரமல்ல தலைக்குள்ளும் கொட்டாதே – 25 May 2012
ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்துத் தங்கள் தரம் பற்றிக் கருதுவது, பிரபலமாகும் அவாவுடன் வாய்ப்புக்களுக்காகத் தன் அடையாளங்களை மறைப்பது, சமூகம் குறித்த அக்கறை அற்றுப் படைப்புக்களை உருவாக்குவது, போன்றவையெல்லாம் எனக்கு ஒத்துவராது! நான் யாரென்பதை என் படைப்புக்கள் சொல்லும்! – 19 April 2012
I’ve donated my 34 cm hair to ‘Little Princess Trust’, hope it helps someone soon! – 27 September 2011
திருவள்ளுவர், ஒளவையார், பாரதியார் ஏன் அந்த இராமர் அனுமார் எல்லாம் கூட தங்கட ஆக்களாம். ஆனால் பெரியார் இந்தியாவாம்! உங்களுக்கெல்லாம் பீரங்கி வைச்சுதான் அடிக்கோணும். ஆ… என்னால முடியேல! – 23 September 2011
I’m not into any attention seeking business. Nor Am I expecting appraisal from society!!! – 13 September 2011
I can’t deal with the people who ruled by the heart but by the head! – 4 September 2011
நீ ஒருவரை வெறுக்க நினைத்தால் அவர் சிறு தவறும் மலையாய்த் தெரியும்.
அவரை நேசிக்க நினைத்தால் அவர் பெரும் தவறும் சிறு கல்லாய்த் தெரியும். – 16 August 2011
என்னுடைய படைப்புக்கள் ”RAP” இசைக்குள் அடங்காது என்று சில தமிழ் ‘RAP’ இசைக்கலைஞர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்!
கருத்துக்கு நன்றி! நான் செய்யும் இந்த இசை முறைக்கு நான்தான் தந்தை! ஆகா இது நல்லா இருக்கே! – 25 July 2011
சமூகம் குறித்த அக்கறை இல்லாதவன் ஒரு கலைஞனாய் இருப்பது வீண்! – 21 July 2011
முக்காற்பங்குத் தமிழர்களும் இங்கு பழமைவாதிகளே! பழைய கட்டுக்களில் இருந்து வெளிவரும் எண்ணம் அவர்களுக்கு இல்லை.
அவர்களுக்கு வெளியேதான் வெளிச்சமே அன்றி உள்ளே கிடையாது! – 8 April 2011
வளர்ந்துவிட்ட தொழிநுட்பத்தால் – மூட நம்பிக்கைகளைப் படம் பிடிக்கிறோம். – 6 April 2011
முன்னாலே மதில் என்றால், தலையாலே முட்டாதே – சுற்றிப்போ! தமிழனாவும் இரு! கவனமாகவும் இரு! – 11 March 2011
ஒவ்வொருவரும் என்னைத் ”தங்களுடைய” கண்ணாடிகளுக்குள்ளால் பார்க்கிறார்கள். அது 100 வீதம் உண்மையானதாய் இருக்காது.
நான் சமூக அக்கறை கொண்ட கலைஞன் என்பதற்கப்பால், பெரிதாய்ச் சொல்லிக்கொள்ள ஒன்றும் இல்லை! – 23 November 2010
ஒரு கலைஞனுக்கு கலை ஆர்வத்துடன் சமூக அக்கறையும் இருக்கவேண்டும். விற்கின்ற படைப்புகளை மட்டும் உருவாக்கி விலை போகக்கூடாது கலைஞன். உருவாக்கப்படும் படைப்புக்களால் ‘உருப்படியாய்” ஏதாவது செய்வோம் என்று நினைக்கின்றேன். – 13 October 2010
அன்று செய்த நன்மைகளையும் தீமைகளையும் வைத்து உன்னை அளவிடுவதை விட ”இன்றென்ன செய்கிறாய் என்பதே” நீ உன்னை அளவிடக்கூடிய சிறந்த அளவுகோல். – 22 September 2010
தன்னுடைய, பிறருடைய அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்கிற விடயங்கள் ஒரு மனிதனை பண்படுத்திக்கொண்டிருக்கும். – 19 September 2010
தமிழர் பண்பாட்டுத் திருமணம் என்றார். போனால் மணமகன் ”Sherwani”யுடன் நிற்கிறார். வேட்டி இல்லையா என்றால் அது ”Smart” இல்லையாம். சரி! அப்படியென்றால் விரும்பிய ஒர் ஆடையணிந்து முடித்து விடலாம்தானே. பிறகேன் ”தமிழர் பண்பாடு” என்றெல்லாம் சொல்லி அதை அவமானப்படுத்துவான். ஓர் நாள் வேட்டிக்கே வெட்கப்பட்டால், வாழ் நாள் தமிழராய் எப்படி வாழ்வோம்? – 13 September 2010
”சமூக அக்கறை” இல்லாத, எந்தத் திறமையான கலைஞனும் இந்த பூமிக்குப் பிரயோஜனம் அற்றவனே! – 9 September 2010
அவர் ஆரம்பிக்கிறபோது எங்களையும் ஆதரியுங்கள் என்பார்.
சற்று வளர்ந்ததாய் ”உணர்ந்தவுடன்” சினிமாவே இலக்கென்பார் (நம் நாட்டை விலக்கென்பார்).
முதுகெலும்பற்றோர்!!!. வீதியில் ஒலித்தாலும் வீணை, வீணைதான்!!! – 8 September 2010
நான் சமூகத்தின் சிரிப்பு, சிந்திப்பு போன்றவைக்கான கலைஞன்.
அதனை விட நான் எதையும் செய்யக்கூடியவன் அல்ல. – 7 September 2010