SujeethG brought a new dimension to Tamil rap music. Tamil identity is always explicitly expressed in his creations. He is a lyrical tiger who pounces with punch lines. He is capable of creating powerful and beautiful sculptures for all genre of music.This is how I originally intended to describe myself.
I am who I am – it is the reality. So, what purpose is served by trying to blow my own trumpet?
Who am I? I believe an artist must also be socially conscious – one who is motivated by saleability of his creations will be ‘sold’. I neither come from a family of musical tradition nor of poet. I want to do something worthwhile from my creations. Nature is my guide – learning from listening – is my source knowledge. These are my strengths. At least, this is how I see myself. I am merely driftwood in the stream of nature. I am not the architect of my success. If at all, I can take the responsibility for my shortcomings and failures. Most of my creations find their expressions in matters that affect my personal life and my surroundings.
I believe that any creation will become wholesome when the expressions of one’s soul meet the reasoning of one’s mind. Some of my writings are scribbles of my thoughts that occurred to me whilst asleep – there are occasions where I had got out of my bed to capture the lines before going back to sleep. My actions are not motivated by the pursuit of vanity.
I am satisfied and happy when I feel I have done something worthy – that’s all. It is not the style but the substance that matters. For me, imagination and creativity are of essence, not gestures or lustre. Vanity is a double edged sword – those who fall on it are to be pitied. Most of my creations are reflections of the contemporary social dynamics. Through my music, I seek to instigate thought and laughter. I neither seek nor able to do more.

————————-+————————-

தமிழ்ச் சொல்லிசைக்கு இவன் பாணி புதுப்பரிமாணம். இவனுடைய படைப்புகளில் தமிழ் முத்திரை பதிக்கப்பட்டு இருக்கும். எந்த வகையான இசைக்கட்டமைப்புக்கும் ஏற்ப சொற்களை செதுக்கக்கூடியவன் இந்தச் சொல்லிசைச் சிற்பி, வரி கொண்டு பாய்வான் இந்த வரிப்புலி. இப்படியெல்லாம் என்னைப் பற்றி எழுதலாம் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் விண்ணை நோக்கி விலாசம் காட்டி யாருக்கு என்ன பயன்? நான் என்பவன் நான் தான். அதற்கு மேல் ஒன்றுமில்லை!
நான் யார்? ஒரு கலைஞனுக்கு கலை ஆர்வத்துடன் சமூக அக்கறையும் இருக்கவேண்டும். விற்கின்ற படைப்புகளை மட்டும் உருவாக்கி விலை போகக்கூடாது கலைஞன். என்றெல்லாம் எண்ணுபவன். உருவாக்கப்படும் படைப்புக்களால் ‘உருப்படியாய்” ஏதாவது செய்வோம் என்று நினைக்கின்றேன்.
நான் எந்த இசைப் பரம்பரை வழி வந்தவனும் அல்ல எந்தச் சொல்லிசைக்காரனும் என் சொந்தக்காரனும் அல்ல.
கேள்வி ஞானமே என் குரு. இயற்கையின் வழி நடத்தலே என் பயணம் அதுவே என் பலம். அப்படித்தான் நான் என்னை உணர்கிறேன். நான் இயற்கையெனும் ஆற்றின் அசைவுகளுக்கு அலையும் வெறும் சருகு. ஆகவே என் படைப்புக்களின் வெற்றிகளுக்குக் காரணம் நான் அல்ல. தோல்விகளை வேண்டுமெனில் நான் பொறுப்பேற்கலாம். என் சூழலில் என்னை பாதிக்கின்ற விடயங்களே, அனேகமாய் என் படைப்புக்களாய் வெளிவரும்.
உள் மனமும் வெளி மனமும் சேர்ந்து இயங்குகின்ற போதுதான் படைப்புக்கள் பலமானதாக இருக்கும். கதையல்ல நிஜம் (விஷம்) பாடலில் வரும் அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு, ஆகவில்லை இன்னும் பதினைஞ்சு’ என்கின்ற வரிகள் நான் தூக்கத்தில் இருந்தபோது எனக்குள் எழுந்த வரிகள். உடன் எழுந்து, எழுதி விட்டு மீண்டும் தூங்கி விட்டேன். இப்படி இன்னும் சொல்லிப்போக என்னிடம் சில அனுபவங்கள் உண்டு.
நான் வெற்று வெளி விலாசங்களுக்காக எதையும் இங்கு செய்யவில்லை. நான் நல்லது செய்வதாய் உணருகிறபோது என் மனம் மகிழ்ச்சி அடைகிறது, திருப்தி கொள்கிறது. அதற்காகவே செய்கிறேன். படைப்புக்களில் ஒப்பனைக்காய் வினாடிகளை விரயமாக்குவதைக் காட்டிலும் கற்பனைக்காய் அவற்றைக் கரைத்துக் கொண்டிருப்பேன். ‘ வெற்று விலாசங்கள்’ இருமுனைக்கத்தி! நம்புகின்றவர்கள் அப்பாவிகள், பாவம்!
என் படைப்புக்களில் அனேகமானவை சமூகத்தின் சமகாலப்பதிவுகளே. நான் சமூகத்தின் சிரிப்பு, சிந்திப்பு போன்றவைக்கான கலைஞன். அதனை விட நான் எதையும் செய்யக்கூடியவன் அல்ல.