தரமான படைப்பு அல்லது படைப்பாளி என்பது மக்களின் கைதட்டல்களையும் YouTube Hits களையும் வைத்தே இன்று தீர்மானிக்கப்படுகிற துர்ப்பாக்கிய நிலமை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி இன்றைய நூற்றாண்டின் தரமான படைப்பு ”GANGNAM STYLE”!?!?
தற்காலிக (சில வருட) பிரபல்யத்தினை நம்பி ஒரு கலைஞன் சமூகத்தினைக் கைவிடக்கூடாது, தன்னைத் தானே ஏமாற்றக்கூடாது என்பது என் கருத்து. ஈழத்தமிழ் கைத்தொழில்த் துறையினை உருவாக்குவது என்பது 2வது பிரச்சனை. முதலில் காத்திரமான படைப்புக்களை உருவாக்க முயற்சிப்போம். வர்த்தக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத ஈரானியத் திரைப்படங்கள் தரத்தில் உயர்ந்தவை என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
எல்லா வித, தரமான படைப்புக்களையும் வெளியிடுவோம். அத்தோடு சமூகம் சார் அக்கறை கொண்ட படைப்புக்களையும் உருவாக்குவோம் (எனது விருப்பம்). சமகாலத்தில் சமூகம் சார் படைப்புக்கள் என்பதை தமிழ் அல்லது தமிழீழம் என்று சுருக்கி அங்காங்கே அது தொடர்பில் சில படைப்புக்களோடு தங்களை உணர்வாளர்களாகத் தக்க வைத்துள்ளார்கள் படைப்பாளிகள் சிலர். முள்ளிவாய்க்காலுக்கு ஒன்று, கறுப்பு யூலைக்கு ஒன்று, காதலர் தினத்துக்கு ஒன்று என்பது சமூக அக்கறை அல்ல அது வியாபார யுக்தி. குறைந்தது 10 ற்கு 2 அல்லது 3 படைப்புக்களாகிலும் சமூகம் பற்றி அக்கறைப்படவேண்டும் என்று கருதுகிறேன்.
இப்படி Facebook குழுமம் ஒன்றில் நான் எழுதியதால் எடுக்கப்பட்ட நேர்காணல்.