Maasilan Screenplay

இம்முறை கொஞ்சம் மினக்கடவேண்டும் என்று நினைத்து உருவாக்கிய படைப்பு மாசிலன். கருவினை எடுத்துக் கதையாக்கி காட்சிகளாகப் பிரித்து ஏற்கனவே பேசி வைத்திருந்த சில நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். அதில் Gnanadas Kasinathar மற்றும் Lenin M. Sivam  ஆகியோர் தமது அபிப்பிராயங்களைத் தெரிவித்திருந்தார்கள். பின்னர் திரைக்கதை வசனங்கள் எழுதி அவர்கள் இருவருக்கும் அனுப்பியிருந்தேன். அதிலும் சில கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தார்கள். அதில் அவர்களுடன் நான் உடன்பட்ட சில திருத்தங்களைச் செய்துவிட்டு படத்தினை எடுத்து முடித்தேன். இருப்பினும் நான் எழுதிய அனைத்தினையும் என்னால் படமாக்க முடியவில்லை. அதற்கு வளம் மற்றும் நேரம் போன்றவை இடம் கொடுக்கவில்லை. அதிலும் அனுபவமின்மை முக்கியமான ஒரு பிரச்சனை!
மற்றப்படி எனது படைப்புக்காக அவர்களது நேரத்தினை ஒதுக்கி தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து மாசிலனை உருவாக்க உதவி செய்த திரு.ஞானதாஸ், திரு.லெனின் ஆகியோருக்கு இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரைக்கதையினைத் தரவிறக்க –  Maasilan Screenplay

Comments are closed.

 

 
 
previous next
X