Periyar 135 – Video & Lyrics


சுட்டெறிக்கும் சூரியனாய் புத்துயிர்க்க வேணும்
உனைக் கட்ட எண்ணும் சக்திகட்கு சவுக்கெடுக்க வேணும்
நீ பெரியாரின் பிள்ளை, என்றும் உடைஞ்சுபோவதில்லை
சாதகத்துத் தொல்லை அது பகுத்தறிவுக் கில்லை
சாதிமத பேதங்களை அறிவுகொண்டு வெட்டு – ஒரு
மனிதனாக வாழ்வதுதான் நன்று முரசு கொட்டு
பொம்பிளைக்கு மரியாதை நீ கொடுக்க மறவாத
பிள்ளை பெறும் யந்திரமா பொம்பிளயப் பாக்காத
தெம்பு பலன் பெண்ணை வெல்வேன் எண்ணுவதே மடமை
வலிமை என்று பார்த்தா அந்த எருமைக்கும் நீ அடிமை
ஆண்மை வெறி அடக்கும் வெறி அத்தனையும் விட்டு எறி
உன்னையறி பெண்ணையறி இதையும் நீ பகுத்தறி
உனக்காய் நீ வாழ, உனையே நீயாள, தனையே தந்தார் ஐயா
நரைத்து நின்றாலும் இளைத்து நின்றாலும் களத்தில் நின்றார் ஐயா
தோளோடு தோளாக நின்றார் ஐயா – சுய
மரியாதை கொண்டாளச் செய்தார் ஐயா
பெரியார் பெரியார் முரசு கொட்டு
பெரியார் பெரியார் வானை முட்டு
சாதகத்தை நம்பி மாளும் மடமை வேணாம் அம்மா
இங்கு சாதியிலே இழிகுலமாம் எழுதிவைச்சான் சும்மா
கற்புநெறி, சமயலறி பித்தலாட்டம் அம்மா – என்றும்
ஆணும் பெண்ணும் நிகர் நீயாய் உணரணும் அம்மா
சாதியத்தை சாதகத்தை அழித்தொழிக்கவேணும் – உன்
பிள்ளைக்கு நீ பகுத்தறிவுப் பால் கொடுக்கவேணும்
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்
நரைத்திளைத்து நின்றாலும் களத்தில் நின்றவர் பெரியார் – உனை
அடக்க முடக்க நினைத்தவரை எதிர்த்து நின்றது வேறு யார்
உனக்குள் இருக்கும் பெரியாரை உசுப்பி நீ விடவேணும் – எமை
வலுவாய் அரிக்கும் மூடப்பழக்கத்தை உடைந்தெறிந்திட வேணும்
எதிர்த்தெழுந்திடவேணும் நீ அறுத்தெறிந்திட வேணும் – எமை
மழுக்க நினைக்கும் அனைத்தினையும் நீ தகர்த்தெறிந்திடவேணும்

Comments are closed.

 

 
 
previous next
X