Visham | Kathai Alla Nijam

பாடல்: விசம்
சொல்லிசையாளன் : சுஜீத்ஜி
இசை : சந்தோஸ்
வரிகள் : சுஜீத்ஜி
Visham 2007 Download
இது கதையல்ல நிஜம் – இப்
புலம் பெயர் வாழ்க்கையில் ஊறும் விஷம்
அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு –
ஆகவில்லை இன்னும் பதினைஞ்சு
கேட்டதவள் பாசம், அன்பாய் சின்ன நேசம்
கிடைக்கேல்லை பாசம், நேசம் –
வாழ்க்கை ஆகிப்போனதடா வேஷம்

அப்பா அம்மா அவளில் காட்டவில்லை நேசம்
கடையிலே பணத்திற்கா வாங்கலாம் பாசம்
அப்பா ரெண்டு வேலை – வரலாம்
காலை மாலை – வந்தால்க் கூடத்
தூக்கம், அஞ்சு கண்ணில் ஏக்கம்
அப்பா என்னைப் பாருங்கோ அஞ்சு எண்டு கொஞ்சுங்கோ
அம்மா அம்மா சொல்லுங்கோ அப்பாவிட்டச் சொல்லுங்கோ
அம்மா கண்ணில்க் கவலை காரணம் பிஞ்சு அஞ்சு இல்லை
அவள் முன்னே சின்னத்திரை அம்மா சின்னத்திரைக் கிரை
ஐயோ பிஞ்சு பாவம் பாசம் எண்டு தாகம்
புலம் பெயர் நாட்டினில யாரிட்டத் தேடிப்போகும்
நாடு விட்டு நாடு வந்தாள் வீட்டில் அன்பிழந்தாள்
தெருவில் வாடுகிறாள் அன்பதைத் தேடுகிறாள்
அப்பாவும் மாறவில்லை அம்மாவும் மீளவில்லை
வருடங்கள் ஓடியது வயசும் ஓடியது
வீட்டிலே சேர்ந்திருந்தும் தனிமை வாட்டியது
நண்பர்கள் சேரவில்லை சேர்ந்தவர் சரியில்லை
நல்லவர் தேடிச்செல்லும் வழியும் தெரியவில்லை
என்ன செய்வாள் அஞ்சு இன்னும் அவள் பிஞ்சு
அன்பு வந்துபோச்சு காதல் என்று பேச்சு
கண்டவுடன் காதல் வீட்டில் கடும் மோதல்
வீட்டைவிட்டுப் பிரிந்து குடும்பம் தனியானாள்
வருடமும் போகக் குழந்தைக்குத் தாயானாள்
சிலகாலம் போச்சு சிக்கல்கள் உருவாச்சு
அன்பு தந்த காதல் எங்கோ ஓடிப்போச்சு
பாசம் வற்றியாச்சு சண்டை முற்றிப்போச்சு
மண வாழ்க்கை முறிந்து உறவு பிரிந்தாச்சு
கைகளிலே மழலை கண்களின் வழி கண்ணீர் மழை

இது கதையல்ல நிஜம் – இப்
புலம் பெயர் வாழ்க்கையில் ஊறும் விஷம்

அஞ்சோ இன்னும் பிஞ்சு அவளுக்கோர் குஞ்சு
பிள்ளை தந்த பாசம் ஓடிற்று சில மாசம்
பிள்ளையோடு கொஞ்சி கொஞ்சி, நேரம் செலவிட
வேலைக்கு நேரம் போச்சு வேலையே ஒர் நாள் போச்சு
கைகளில் காசு இல்லை உதவ யாரும் இல்லை
செய்வது என்ன வென்று அவளுக்குப் புரியவில்லை
கடையில களவெடுத்து மரியாதை மீளவில்லை
அஞ்சு கதை வெளியாச்சு ஊர் முழுக்க இது பேச்சு
அரசுக்கும் கதை போச்சு அஞ்சு பிள்ளை பறிபோச்சு
மறுபடி தெருவில ஊர் சனம் சேரவில்லை
பிள்ளையதும்; போனதால உயிரில் ஜீவன் இல்லை
அஞ்சு தடம் புரண்டு போதைக்கடிமையானாள்
வந்தவை போனவையோட ராவில் சுத்தலானாள்
அஞ்சு வாழ்க்கை மாறிப்போச்சு மானம் மலை ஏறிப்போச்சு
என்ன செய்வாள் அஞ்சு இன்னும் அவள் பிஞ்சு
என்ன செய்தும் முடியேல்ல பாசம் நேசம் கிடைக்கேல்ல
கண்ணாடி முன்னால நின்று இருந்தென்ன பயன் நான் வாழ்ந்தென்ன பயன்
கேட்ட கேள்விக்குப் பதில் இல்ல வாழ்வை முடிப்பதில் பிழை இல்லை
கதறினாள் அஞ்சு அவள் குடிக்கிறாள் நஞ்சு
வாழும் போது உதவாதவர் சாகும்போது தடுக்கிறார்
அஞ்சு அவளை அள்ளிக் கொண்டு வைத்தியரிடம் சேர்க்கிறார்
அஞ்சு அவள் விழி திறக்க பிள்ளை நிற்கக் காண்கிறாள்
ஐயோ என்னிலை வருமோ என்று விழிகள் இறுக்க மூடுகிறாள்
உயிரை துறக்க மூடுகிறாள்

இது கதையல்ல நிஜம் – இப்
புலம் பெயர் வாழ்க்கையில் ஊறும் விஷம்
அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு –
ஆகவில்லை இன்னும் இருவத்தஞ்சு

 

 
 
previous next
X